பிரிவு ரீதியான அமைப்பும் பிரிவுகளின் தொழிற்பாடுகளும்

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தற்போதைய பொறுப்புக்களுக்கிணங்க அதன் தொழிற்பாடுகள் பின்வரும் பிரிவுகளின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது.

 
முதலீட்டுப் பிரிவு

மூலதனக் கணக்கு கொடுக்கல் வாங்கல்களுக்கான பொதுவான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் முன்னொப்புதல் தேவைப்படும் மூலதனக் கணக்கு கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் முதலீட்டுப் பிரிவினால் கையாளப்படுகின்றன.

 
கொள்கைப் பிரிவு

திணைக்களத்தின் கொள்கை உருவாக்கும் செயன்முறையினை வசதிப்படுத்துதல்.

 
கண்காணிப்புப் பிரிவு

கண்காணிப்பினை செய்யும் பொழுது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களின் புள்ளிவிபரவியல் தரவு தளத்தினை பேணுவது மற்றும் தரவுகளை தேர்ந்தெடுத்து தொகுப்பது போன்றவற்றில் ஈடுபடுதல், வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவத்தில் கொள்கை முடிவினை வினைத்திறனாக எடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினை சாத்தியமாக்குவதும்.

 
நிருவாகப் பிரிவு

திணைக்களத்தின் செயற்பாட்டிற்கான உதவிகரமான தொழிற்பாடுகளை மேற்கொள்ளுதல்

 
நடைமுறை வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்கள் பிரிவு

நடைமுறை வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்கள் பிரிவானது பொருட்கள் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள், பணிகள், கப்பற்படுத்தல், வான் நிறுவன முகவர்கள் மற்றும் சரக்கு அனுப்புகின்ற கம்பனிகள் என்பன உள்ளிட்ட நடைமுறை பன்னாட்டு வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான அனைத்துக் கடிதத் தொடர்புகளை செயன்முறைப்படுத்துவதற்கும் பொறுப்பாகவிருக்கின்றது. அத்துடன் பிரிவானது முற்பணக் கொடுப்பனவு நியதிகளின் கீழ் செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிகளில் காணப்படும் தாமதங்கள் தொடர்பான கண்காணிப்புகளிலும் ஈடுபட்டது.

தொழிற்பாடுகள்:

  • சரக்கு அனுப்பும் கம்பனிகளைப் பதிவு செய்தல் மற்றும் அவர்களது கணக்குகள் / கொடுக்கல்வாங்கல்களைக் கண்காணித்தல்
  • நடைமுறை பன்னாட்டு வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான விடயங்களில் ஆலோசனை வழங்குதல்
  • கப்பற்படுத்தல் பகிர்ந்தளிப்புக் கணக்குகள் மற்றும் வான் நிறுவனங்களின் கணக்குகள் / கொடுக்கல்வாங்கல்களைக் கண்காணித்தல்
  • கப்பற்படுத்தல் நிறுவனங்கள், வான் ஊர்தி நிறுவனங்கள் என்பனவற்றின் பெயரில் வங்கி உத்தரவாதங்களை வழங்குவதற்கும் நடைமுறைக் கணக்கு கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான வேறு ஏதேனும் கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் அளித்தல்
  • முற்கொடுப்பனவு நியதிகளின் கீழ் செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிகளில் காணப்படும் தாமதங்களை கண்காணித்தல்.
  • உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள்
 
புலம்பெயர்ந்தோர் நிதிய மாற்றல் பிரிவு

புலம்பெயர்ந்தோர் நிதிய மாற்றல் பிரிவின் முக்கியமான பொறுப்பானது பிறநாட்டிற்குச் சென்று குடியேறுவோருக்கும் மற்றும் உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளிற்கும் இது தொடர்பான அவசியமான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டலையும் வழங்குவதும், மற்றும் இட நகர்விற்கான படியினை தகுதியான நபரிற்கு வழங்கவதற்கு உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளிற்கு வழிகாட்டுவதும் ஆகும்.