அறிமுகம்

உறுதியான நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்டு வௌிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் பிாிவு 9இன் ஏற்பாடுகளின் விடயங்களிற்குட்பட்டு 2017இன் 12ஆம் இலக்க வௌிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் பிாிவு 4(2)(அ) மற்றும் 4(2)(ஆ) இன் ஏற்பாடுகளின் நியதிகளில் வௌிநாட்டுச் செலாவணியினை கையாள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வணிகா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட வணிகா்கள் பின்வருவனவற்றிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்

  • இலங்கை ரூபாவிற்கு எதிராக வௌிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்வதற்கு
  • வேறு ஏதேனும் வௌிநாட்டு நாணயங்களிற்காக வௌிநாட்டு நாணயங்களை பாிமாற்றுவதற்கு (சுற்றுலா விடுதிகள் தவிர), மற்றும்
  • தொிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வணிகா்கள் மட்டுமே இலங்கை ரூபாவிற்கு எதிராக வௌிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வதில் ஈடுபட முடியும்.