புலம்பெயர்ந்தோர் முற்பணங்கள்

1. தகைமை

1.1  புலம்பெயர்ந்தோர் முற்பணங்களை பரிமாற்றல் தொடர்பில் பின்வரும் தனிநபர்கள் மூலதனக் கொடுக்கல் வாங்கல் ரூபாக் கணக்குளை திறந்து பராமரிப்பதற்கு தகுதியுடையவர்கள்

1. இலங்கைக்கு வெளியே நிரந்தரமாக வதியும் இலங்கைத் தனிநபர்    ஒருவர்

2. இரட்டைப் பிரஜாவுரிமைவுடைய இலங்கையர் ஒருவர்

3. இலங்கை மரபுரிமையுடைய வெளிநாட்டவர்

4.இலங்கையர் அல்லது இலங்கை மரபுரிமையுடைய இலங்கைக்கு வெளயே வதியும் பராயமடையாதோர்

1.2 மேற்படி தனிநபர்கள் பின்வரும் வகையில் புலம்பெயர்ந்தோர் முற்பணங்ளைப் பெற தகுதியுடையவர்

அ. 18 வயதும் அதற்கு அதிகமான தனிநபர் ஒருவருக்கு ஐ.அ.டொ 200,000 ஆரம்ப புலம்பெயர் முற்பணம்

ஆ.ஆரம்ப முற்பணத்தின் பூரண பயன்பாட்டிலிருந்து 12மாதங்களின் பின்னர் ஐ.அ.டொ 30,000 வருடாந்த புலம்பெயர்ந்தோர் முற்பணம்

1.3 புலம்பெயர்ந்தோர் முற்பணங்கள், புலம்பெயர்ந்தோர் கொண்டுள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மற்றும் உருவ மற்றும் அருவச் சொத்துக்களின் விற்பனை மற்றும் புலம்பெயர்ந்தவரின் துணைவர் அல்லது   பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட சன்மானங்களை உள்ளடக்குகிறது. சொத்துக்களானது,விலையுயர்ந்த கற்கள்,விலையுயர்ந்த உலோகங்கள்,தனிப்பட்ட ஆபரணங்கள் மற்றும் பயனாளிகளாக மரபுரிமை மூலம் பெறப்பட்ட காணிகள் உள்ளடங்கலாக இலங்கையில் உள்ள வேறு ஏதேனும் சொத்துக்களை உள்ளடக்கலாம்.

2. புலம்பெயர்ந்தோர் முற்பணங்களைபெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள்

புலம்பெயர்ந்தோர் முற்பணங்கள் வழங்கலில் பின்வரும் தகவல்கள்/ஆவணங்கள் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இது தொடர்பில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளைத்தொடர்புகொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

  1. புலம்பெயர்ந்தவரிடமிருந்தான முறையான கோரிக்கையொன்று (அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் படிமொன்றைப் பேணுமாறு ஆலோனை வழங்கப்படுகின்றனர்)
  2. நிரந்தர வதிவுரிமை, பிரஜாவுரமை (ஏதுமிருப்பின்) மற்றும் இரட்டைப்பிரஜாவுரிமையினை (ஏதுமிருப்பின்) அத்தாட்ச்சிப்படுத்தும் ஆவணங்கள்
  3. நிதி மூலங்களினை உறுதிப்படுத்துகின்ற செல்லுபடியாகும் ஆவணங்கள் (நன்கொடையாளியினால் கையொப்பமிடப்பட்ட உடன்பாட்டுக் கடிதத்தினையும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது விவாகப் பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை ஏற்படைத்தான விதத்தில் இணைத்துச் சமர்ப்பிக்கப்படுமிடத்து விண்ணப்பதாரியின் பெற்றோர் அல்லது துணைவரிடமிருந்தான சன்மானங்ளை நிதியங்களின் மூலமாக ஏற்றுக்கொள்ள முடியும்)
  4. அனுப்பப்பட வேண்டிய தொகைக்காக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடமிருந்தான வரி வசூலிற்கான சான்றின் மூலப்பிரதி
  5. ஆரம்பப் படியான ஐ.அ.டொ 200,000 மற்றும் வருடாந்தப் படியான ஐ.அ.டொ 30,000 இனை விஞ்சி மாற்றல்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை அல்லது மேற்கொள்ளப்படாது என்பதனை வெளிப்படுத்துகின்ற வித்த்தில் சமாதான நீதவான்/சத்தியப் பிரமாண ஆணையாளர்/சொலிஸ்டரினால் சரியான முறையில் முத்தரையிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதொரு சத்தியக்கடதாசி. பிரகடனப்படுத்தப்பட்ட திகதிக்கு முன்னதாக ஏதேனும் புலம்பெயர் படி பயன்படுத்தப்பட்டிருப்பின் அதனைப் பிரகடனப்படுத்தல் வேண்டும்
  6.  நிரந்தர வதிவிட விசா பெறப்படும் நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் அதனைத் தொடர்ந்து இன்றுவரை வைத்திருக்கப்படும் புலம்பெயர்பவரின் கடவுச்சீட்டுக்களினது அனைத்துப் பக்கங்களினதும் பிரதிகள்
  7. வான் பயணச்சீட்டின் பிரதி (முதலாவது வெளியேறலின் போது)
  8. புலம்பெயர்பவரின் அட்டோணித்துவத்தின் பிரதியொன்று (ஏற்புடைத்ததாயின்)
  9. சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 3 (இது தொடர்பான அனைத்து தகவல்களும் முழுமையாக பூரணப்படுத்தப்பட வேண்டும்)
  10. மேற்குறிப்பிட்டவை தவிர, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர், அவர்களது உள்ளக நடைமுறைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஏதேனும் ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்

குறிப்புக்கள்

 

1.புலம்பெயர்ந்தோர் முற்பணம் தொடர்பான துணை ஆவணங்களின் அனைத்து பிரதிகளும் மூலப் பிரதியின் உண்மைப் பிரதியென சமாதான நீதவான்/சத்தியங்களுக்கான ஆணையாளரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

 

2.அவன்/ அவள் நிரந்தர வதிவிட விசா பெறும் நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் அதனைத் தொடர்ந்து இன்றுவரை வைத்திருக்கப்படும் ஏதேனும் இலங்கைக்கான கடவுச்சீட்டனை விண்ணப்பதாரி சமர்ப்பிக்க முடியாதுவிடின் அவன்/அவள் ஐ.அ.டொ 200,000 ஆரம்ப புலம்பெயர் முற்பணத்தினை பெறுவதற்கு தகுதியற்றவராவார் என்பதுடன் வருடாந்த முற்பணமான ஐ.அ.டொ 30,000 பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவராவார்.

 

  விண்ணப்பதாரிகளுக்கான சிறப்பு குறிப்புக்கள்

அ. புலம்பெயர்ந்தவர்களின் நடைமுறை வருமானம்(வட்டி, வாடகை, பங்குலாபங்கள், குத்தகை வருமானங்கள், இலாபங்கள், ஓய்வூதியங்கள் உள்ளடங்கலாக) மற்றும் ஓய்வுகால நன்மைகள் (ஊ.சே.நி,ஊ.ந.நி மற்றும் பணிக்கொடை) மூலதன கொடுக்கல் வாங்கல்கள் ரூபாக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட முடியும் என்பதுடன் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளரின் முன் அனுமதியின்றி இலங்கைக்கு வெளியே பராமரிக்கப்படும் கணக்கொன்றிற்கு புலம்பெயர் முற்பணங்களிற்கு மேலதிகமாக பரிமாற்றிக்கொள்ள முடியும்.

 

ஆ. வதிபவர் ஒருவர் நிரந்தர வதிவிடத்தின் மீது புலம்பெயர்வதற்கு தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் போது இலங்கையிலுள்ள வங்கிகளினால் அவருக்கு வழங்கப்பட்ட இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகளினை அவன்/அவள் கையளிப்பதுடன் இரத்துச்செய்தல் வேண்டும். (வரவு அட்டை மற்றும் பற்று அட்டை உள்ளடங்கலாக)

 

இ. புலம்பெயர் முற்பணத்திற்கு விண்ணப்பிக்கும் போது அவை அத்தியாவசியம் என்பதால் தங்களுடைய அனைத்து இலங்கை கடவுச்சீட்டுக்களையும் புலம்பெயரும் நேரத்தில் பாதுகாப்பில் வைத்திருப்பனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஈ. மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்/நடைமுறைகளிற்கு மேலதிகமாக குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களில் வேறு ஆவணங்கள்/நடைமுறைகளினை அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் கோர முடியும்.