வதிவோர் மற்றும் வதிவற்றோர்

வதிவோர்

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் பின்வரும் ஆட்கள் இலங்கையில் வதிபவர்களாக கருதப்படுவர்.

1. இலங்கைப் பிரஜைகள்

2. இலங்கைப் பிரஜையை திருமணம் செய்த வெளிநாட்டவர், கடைசி 12 மாதங்களில் 183 நாட்களுக்கு அதிகமாக இலங்கையில் தங்கியிருப்பின்

3. தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள். அதாவது 182 நாட்களை விஞ்சாதுவிடின்

4. மாணவர் விசாவின் மூலம் வெளிநாடுகளில் வதியும் இலங்கைப் பிரஜைகள்

5. வெளிநாட்டில் வதியும் இலங்கை அரசின் இராஜதந்திர பிரதிநிதிகள், காவற்தூதுவர்கள் மற்றும் வர்த்தக ஆணையாளர்களும் அவர்களின் குடும்ப பிரதிநிதிகளும்

6. அரச கூட்டுத்தாபனங்கள்/ நிறுவனங்கள், நியதிச்சட்ட சபைகள், உரிமம்பெற்ற வங்கிகள் அல்லது இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளின் ஊழியர்களும் வெளிநாட்டில் வதியும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும்

7. வதியும்/தொழில் விசாவின் மீது இலங்கையில் இருக்கும் அல்லது தொழில்புரியும் வெளிநாட்டவர்கள்

8. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள், கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுக் கம்பனிகள்,வெளிநாட்டுக் கம்பனிகளாகப் பதிவுசெய்யப்பட்ட கம்பனிகள் மற்றும் கழகங்கள்,சமூகங்கள் அல்லது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அரசசார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக வேறு ஏதேனும் அமைப்புக்கள்

9. இறந்த நேரத்தில் இறந்தவர், அல்லது தீர்த்துவைத்தல் செய்யப்பட்ட நேரத்தில் தீர்த்து வைப்பவர் மேலே 1 முதல் 5 வரையிலான பந்திகளின் நியதிகளின்படி வதிபவராகவிருந்தவிடத்து, அத்தன்மையில் மட்டுமே செயலாற்றும்போது இறுதிவிருப்பாவண நம்பிக்கைப் பொறுப்புக்களின் அல்லது வாழ்வோரிடைத் தீர்த்துவைத்தல்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் மரணச் சொத்துக்களின் நிருவாகிகள் அல்லது இறுதிவிருப்பாவணங்களின் நிறைவேற்றுநர்கள்

10. இலங்கைக் கப்பல் ஒன்றில் தொழில்புரியும் இலங்கைப் பிரஜைகள்

வதிவற்றோர்

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் மேலேயுள்ளவர்கள் தவிர்ந்த ஆட்கள் இலங்கையில் வதிவற்றோராகக் கருதப்படுவர்