வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம்
வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம்
வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2017ஆம் ஆண்டு 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
எமது தொலைநோக்கு
இலங்கையின் பொருளாதார சுபீட்சத்திற்கு பங்களிக்கக்கூடிய வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையினை வினைத்திறனுடனும் காத்திரமான முறையிலும் ஒழுங்கான விதத்திலும் அபிவிருத்தி செய்வதற்கு வசதியளிக்கின்ற ஒரு சிநேகபூர்வச் சந்தை உபாயப் பங்காளராக மாறுவது.
எமது பணிகள்
பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் வாயிலாக முதலீடுகள் மற்றும் முன்னேற்றகரமான வியாபார உறவு முறைகளை ஏற்படுத்துவதற்கான தூண்டுதலளிக்கக்கூடியதும் வியாபாரச் சூழலொன்றை கட்டாயமாக ஏற்படுத்தக்கூடியதுமான தன்மையொன்றினை உருவாக்குவதற்கு நாம் ஆர்வம் கொண்டுள்ளோம்.
- சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவாறான முதலீடுகள் மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக வெளிநாட்டுச் செலாவணியின் சுமூகமான உட்பாய்ச்சல்களை உறுதிப்படுத்துதல்.
- ஆரோக்கியமற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தி தடை செய்வதற்காக முன்மதியுடைய வழிமுறைகளை அறிமுகப்படுத்தல்.
- முகாமைத்துவத்திற்கு பேரண்டப் பொருளாதார தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகளுக்கு வசதியளித்தல், தகவல்களையும் தரவுகளையும் வழங்குதல்
- வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம் மற்றும் அது தொடர்பான துறைகளில் அறிவினையும் பகுப்பாய்வு இயலாற்றல்களையும் அதிகரிக்கும் நோக்குடன் தொடர்ச்சியாக முன்னணி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்