பிரிவு ரீதியான அமைப்பும் பிரிவுகளின் தொழிற்பாடுகளும்
வௌிநாட்டுச் செலாவணித் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தற்போதைய பொறுப்புக்களுக்கிணங்க அதன் தொழிற்பாடுகள் பின்வரும் பிரிவுகளின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது.
மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள் பிாிவு
மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்பான திணைக்களத்தின் ஒழுங்குவிதிகளின் அமுலாக்கத்தினை வசதிப்படுத்தல்
கொள்கை மற்றும் ஆராய்ச்சிப் பிாிவு
திணைக்களத்தின் கொள்கை உருவாக்கும் செயன்முறையினை வசதிப்படுத்துதல்.
புள்ளிவிபரவியல், கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிாிவு
கண்காணிப்பினை செய்யும் பொழுது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களின் புள்ளிவிபரவியல் தரவு தளத்தினை பேணுவது மற்றும் தரவுகளை தேர்ந்தெடுத்து தொகுப்பது போன்றவற்றில் ஈடுபடுதல், வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவத்தில் கொள்கை முடிவினை வினைத்திறனாக எடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினை சாத்தியமாக்குவதும்.
நிருவாகப் பிரிவு
திணைக்களத்தின் செயற்பாட்டிற்கான உதவிகரமான தொழிற்பாடுகளை மேற்கொள்ளுதல்