அடிப்படை தகவல்கள்
வதிவோர்
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் பின்வரும் ஆட்கள் இலங்கையில் வதிபவர்களாக கருதப்படுவர்.
1. இலங்கைப் பிரஜைகள்
2. இலங்கைப் பிரஜையை திருமணம் செய்த வெளிநாட்டவர், கடைசி 12 மாதங்களில் 183 நாட்களுக்கு அதிகமாக இலங்கையில் தங்கியிருப்பின்
3. தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள். அதாவது 182 நாட்களை விஞ்சாதுவிடின்
4. மாணவர் விசாவின் மூலம் வெளிநாடுகளில் வதியும் இலங்கைப் பிரஜைகள்
5. வெளிநாட்டில் வதியும் இலங்கை அரசின் இராஜதந்திர பிரதிநிதிகள், காவற்தூதுவர்கள் மற்றும் வர்த்தக ஆணையாளர்களும் அவர்களின் குடும்ப பிரதிநிதிகளும்
6. அரச கூட்டுத்தாபனங்கள்/ நிறுவனங்கள், நியதிச்சட்ட சபைகள், உரிமம்பெற்ற வங்கிகள் அல்லது இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளின் ஊழியர்களும் வெளிநாட்டில் வதியும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும்
7. வதியும்/தொழில் விசாவின் மீது இலங்கையில் இருக்கும் அல்லது தொழில்புரியும் வெளிநாட்டவர்கள்
8. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள், கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுக் கம்பனிகள்,வெளிநாட்டுக் கம்பனிகளாகப் பதிவுசெய்யப்பட்ட கம்பனிகள் மற்றும் கழகங்கள்,சமூகங்கள் அல்லது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அரசசார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக வேறு ஏதேனும் அமைப்புக்கள்
9. இறந்த நேரத்தில் இறந்தவர், அல்லது தீர்த்துவைத்தல் செய்யப்பட்ட நேரத்தில் தீர்த்து வைப்பவர் மேலே 1 முதல் 5 வரையிலான பந்திகளின் நியதிகளின்படி வதிபவராகவிருந்தவிடத்து, அத்தன்மையில் மட்டுமே செயலாற்றும்போது இறுதிவிருப்பாவண நம்பிக்கைப் பொறுப்புக்களின் அல்லது வாழ்வோரிடைத் தீர்த்துவைத்தல்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் மரணச் சொத்துக்களின் நிருவாகிகள் அல்லது இறுதிவிருப்பாவணங்களின் நிறைவேற்றுநர்கள்
10. இலங்கைக் கப்பல் ஒன்றில் தொழில்புரியும் இலங்கைப் பிரஜைகள்
வதிவற்றோர்
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் மேலேயுள்ளவர்கள் தவிர்ந்த ஆட்கள் இலங்கையில் வதிவற்றோராகக் கருதப்படுவர்
வெளிநாட்டுச்செலாவணியை உடமையில் வைத்திருத்தல்
இலங்கை ஆட்கள் ஐ.அ.டொ 10,000 அல்லது அதற்கு சமமான வேறு வெளிநாட்டு நாணயங்ளை ஏதேனும் காலத்திற்கு வெளிநாட்டு நாணயத் தாள்களாக தமது உடமையில் வைத்திருக்கலாம். இத்தகைய வெளிநாட்டு நாணயங்கள் இலங்கைக்கு வெளியே வதியும் ஒருவரிடமிருந்து சன்மானமாகப் பெறப்பட்டதாக அல்லது பிரயாண நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்வனவுசெய்யப்பட்டதாக அல்லது அவர்/அவளது தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து பிரயாண நோக்கத்திற்காக மீளப்பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
இலங்கையில் வதியும் ஆள் ஒருவர் இலங்கைக்கு வெளியே வதியும் ஆள் ஒருவருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளினை வழங்கியதன் மூலம் பெறப்பட்ட வெளிநாட்டு நாணயங்ளை 7 நாட்கள் வரை தமது உடமையில் வைத்திருக்கலாம் என்பதுடன் அத்தகைய காலப்பகுதியில் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வரவு வைத்தல் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஒருவருக்கு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட முகவர் ஒருவருக்கு விற்பனை செய்தல் வேண்டும்.
அத்தகைய நாணயங்கள் அவர்/ அவளினால் இலங்கைக்கு வெளியே பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுடன் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வணிகர்களுடன் பராமரிக்கப்படும் வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலிருந்து பெறப்பட்டது எனின் எந்தவொரு பெறுமதியான வெளிநாட்டு நாணயங்ளையும் இலங்கையில் வதிவற்றவர் தமது உடமையில் வைத்திருக்கலாம்.
வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருக்கும் காலம்
குறிப்பிட்ட நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட முகவர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்ளை பெற்றுக்கொண்ட ஆட்கள் அத்தகைய நாணயங்களை இலங்கை ரூபாவிற்கு உருமாற்றம் செய்யாது 90 நாட்களை விஞ்சாத காலப்பகுதிக்கு உடமையில் வைத்திருக்க முடியாது.
வெளிநாட்டு நாணயங்கள் இலங்கைக்கு வெளியே ஈட்டப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருப்பின் 90 நாட்களுக்குள் இலங்கை ரூபாவிற்கு உருமாற்றம் செய்யாது அல்லது வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வரவுவைக்காது தமது உடமையில் வைத்திருக்க முடியாது.
வெளிநாட்டு நாணயங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
இலங்கைக்கு வரும் அல்லது வெளியேறும் நபர்கள்
இலங்கைக்கு வரும் அல்லது வெளியேறும் ஆட்கள் நாணயத் தாள்கள், வங்கி வரைபுகள், காசலைகள், பிரயாண அட்டைகள் போன்ற வடிவில் ஏதேனும் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்ளை கொண்டுவர முடியும். எவ்வாறாயினும், அத்தகைய ஆள் இலங்கைச் சுங்கத்திற்கு வெளிப்படுத்தலினை மேற்கொள்ளல் வேண்டும்.
அத்தகைய பெறுமதி ஐ.அ.டொ 15,000 அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தினை விஞ்சினால், அல்லது
ஐ.அ.டொ 10,000 அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தினை விஞ்சுகின்ற வெளிநாட்டு நாணயத்தாள்களை மீண்டும் எடுத்துச் செல்லும் நோக்குடன் அவர்/ அவள் இலங்கைக்கு வந்திருப்பின்
இலங்கையில் இருக்கும் ஆட்கள்
இலங்கையில் இருக்கும் அல்லது வதியும் ஆட்கள், இலங்கை ரூபாய் 20,000 வரை பெறுமதியான இலங்கை நாணயங்களை முறையே இலங்கைக்கு வெளயே அல்லது இலங்கைக்கு கொண்டுவர முடியும்.
அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள்
அவர்களின் சாதாரண வியாபாரத்தின் போதும் அவர்களின் அதிகாரத்தின் நியதிகளில் கையேற்கப்பட்டதுமான வெளிநாட்டு நாணயங்களை அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் இலங்கையிலிருந்து ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய முடியும்.